கடையத்தில் தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
1 min read
Public meeting in Kadayam explaining the TVK government’s 100-day achievements.
248/2026
2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் முதன்முறையாக தனித்து போட்டியிட்டு தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அகில இந்திய அளவில் பல்வேறு கருத்துக் கணிப்புகளையும் தவிடுபொடியாக்கி ய இந்த வெற்றி பல அரசியல் கட்சிகளையும் ஆட்டம் காண வைத்தது.
எதிர்பாரா வெற்றியை குவித்து தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று ஆட்சியமைத்ததின் 100வது நாளை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தும்படி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி தென்காசி தெற்கு மாவட்டத்தின் சார்பில் கடையத்தில் நேற்று தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி தலைமையேற்று அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கடையம் வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் லெச்சிய காந்தன், பொருளாளர் விவேக், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சுனில் மேண்ட்லி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மனோஜ் பினு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய்
மாவட்ட அரசு வழக்கறிஞர் தினேஷ், தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் கிரிப்சன், மாவட்ட துணைச் செயலாளர் தயாள் சரண், மாவட்ட பொருளாளர் இசக்கி, வி.கே. கணபதி, மாவட்ட சுற்றுச் சூழல் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் பெர்வின் ராம், தொழிலதிபர் பரமசிவன், மேற்கு ஒன்றிய செயலாளர் சங்கர், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வமுருகன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஜனதா, மாவட்ட பயிற்சிப் பாசறை அணி அமைப்பாளர் கேபிரியல், மாவட்ட கலை கலாச்சார அணி அமைப்பாளர் ஆண்டனி ராஜ், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வழக்கறிஞர் நியாஸ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துலெட்சுமி, துணை அமைப்பாளர் மைமூன், ஒன்றிய மகளிரணி செயலாளர் முத்துலட்சுமி, ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் சத்யராஜ், வழக்கறிஞர் மணிப்பாண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை அமைப்பாளர் வெங்கடேஷ் பிரபு, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி இசக்கி ரத்தினம், முப்புடாதி, கோபால் ராஜ், மதன் உள்ளிட்ட நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.