கீழப்பாவூரில் தெக்ஷண மாற நாடார் சங்கத்தின் 62வது மகாசபை கூட்டம்
1 min read
62nd General Body Meeting of the Thekshana Mara Nadar Sangam in Keelapavur
25/8/2026
திருநெல்வேலி தெக்ஷணமாற நாடார் சங்கத்தின் 62வது மகாசபை கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது.
திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கத்தின் 62வது மகாசபை கூட்டம் கீழப்பாவூர் ராமரத்தினலட்சுமி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. காளிதாசன் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். காரியக் கமிட்டியின் உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் வரவேற்புரையாற்றினார். செயலாளர் ராஜகுமார் நாடார் ஆண்டறிக்கையை வாசித்தார். தணிக்கை செய்யப்பட்ட 2025 -26ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் வரவு செலவு ஆண்டறிக்கையை பொருளாளர் செல்வராஜ் நாடார் வாசித்தார்.
சங்கத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம் நாடார், செந்தில் செல்வன் நாடார், செல்வன் நாடார், சுதாகர் நாடார் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் மகாசபை கூட்ட ஆய்வுக்கான பொருட்கள் ஆய்வுக்கு விடப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் நிர்வாகம் தொடர்ந்து நடைபெற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க ஆயுட்கால உறுப்பினர்கள் சங்கம் மற்றும் சமுதாய வளர்ச்சி குறித்து தங்களது கருத்துக்களை வழங்கினர்.
மருதம்புத்தூரில் பனை மரத்திலிருந்து கள்ளிறக்கியதாகக் கூறி ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு திருநெல்வேலி தெட்சிணமாற நாடார் சங்கம் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது.
தென்காசி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மேம்பாலத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டியதற்கும் மேலும், கர்மவீரர் காமராஜர் அவர்கள் பிறந்தநாள் அன்று முக்கிய கோவில்களில் அவரது பெயரில் அன்னதானம் வழங்கப்படும் என்றும் ரூபாய் ஆயிரம் கோடியில் காமராஜர் கல்வி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளமைக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க காரிய கமிட்டி உறுப்பினர்கள் உமரிசங்கர் நாடார், கல்யாணசுந்தரம் நாடார், வைத்தியலிங்கம் நாடார், காமராஜ் நாடார், நிர்வாக சபை உறுப்பினர்கள் சௌந்தர்ராஜன் நாடார், செல்வன் நாடார், ஆறுமுகநயினார் நாடார், கோல்டன் செல்வராஜ் நாடார், ரவீந்திரன் நாடார், மாணிக்கவாசகம் நாடார், ராமசுப்பு நாடார், ரகுநாதன் நாடார், ஜனகர் நாடார், சதீஷ்குமார் நாடார், ராகவன் நாடார், சிவக்குமார் நாடார், லிங்க செல்வன் நாடார், கருணாகரன் நாடார், சுரேஷ் நாடார், ராஜசேகர் நாடார், ராதாகிருஷ்ணன் நாடார், செந்தமிழ் சேகர் நாடார், பண்ணை செல்வகுமார் நாடார், அருள் மேயர் நாடார், வி.கே. கணபதி நாடார், கணேசன் நாடார், கோகலே நாடார், ஜெயக்கொடி நாடார், அந்தோணி நாடார், பட்டு ராஜா நாடார், திருமதி தனித்தங்கம், திருமதி ராதிகா சரவணகுமார், மும்பை கிளைச் சங்க சேர்மன் காசிலிங்கம் நாடார், செயலாளர் மைக்கேல் ஜார்ஜ் நாடார், உதவி சேர்மன் மகேந்திரன் நாடார், இணை செயலாளர் சுரேஷ் நாடார், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார் ஜேக்கப் நாடார், பால்ராஜ் நாடார், மணிகண்டன் நாடார், பொன்பாண்டி நாடார், கோபால் ராஜா நாடார், ராஜ்குமார் நாடார், லிங்கதுரை நாடார் மற்றும் மதி செல்வன் நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா முடிவில் திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கத்தின் துணை செயலாளர் ராமநாதன் நாடார் நன்றியுரையாற்றினார்.