August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

கரிவலம்வந்தநல்லூர் கோவிலில் ஆவணி தபசு திருவிழா

1 min read

Aavani Thapasu Festival at Karivalamvandanallur Temple

25/8/2026
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணைக் கோவிலான கரிவலம்வந்த நல்லூர் ஒப்பனை அம்மாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி கோயில் ஆவணிதபசு திருவிழா நடைபெறாறது.

கடந்த 12ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது அதனைத்தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 11-ம் திருநாளான சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற்றது. சிகர நிகழ்ச்சிக்கான ஆவணித்தபசு 13-ம் திருநாளான நேற்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு மதியம் தெற்குரதவீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சுவாமி தவசு காட்சி கொடுக்கும் பந்தலுக்கு வந்தடைந்தார். அப்போது மண்டபத்தில் இருந்த அம்பாள், தவசு காட்சி கொடுக்கும் இடத்தில் இருந்த சுவாமியை மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மூன்று முறை மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் சுவாமி, அம்பாளுக்கு முகலிங்கநாதராக காட்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதணைகள் நடைபெற்றது. பின்னர் இரவு பால் வண்ண நாதராக காட்சி கொடுத்தார்.

இந்த விழாவில் கோவில் துணை ஆணையர் ஞானசேகரன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக வெற்றிக்கழக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன், கோவில் கண்காணிப்பாளர் ராஜகோபால், உதவி பாதுகாப்பு அலுவலர் முப்பிடாதி, சமூக ஆர்வலர்கள் சண்முகவேல், பழனிவேல்ராஜன், மற்றும் சங்கரன்கோவில்,
கரிவலம் வந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *