August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

அச்சன்புதூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்த 2 காட்டு யானைகள்

1 min read

Two wild elephants entered the village in the Achanpudur area.

25.8.2026
தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் அருகே உள்ள நெடுவயல் கிராமத்தில் பொதுமக்கள் வாழும் பகுதியில் நேற்று இரவு இரண்டு காட்டு யானைகள் நுழைந்ததால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமும். பீதியும் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் பண்பொழி, வடகரை, அச்சன்புதூர், மற்றும் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தென்னந்தோப்புகள், வாழைகள் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் விளைநிலங்களில் பயிர்களையும் மிதித்து சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அச்சன்புதூர் அருகே நெடுவயல் கிராமத்திற்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகளும் பார்க்கும் போதே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடமாடுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள செங்கோட்டை–கடையநல்லூர் நெடுஞ்சாலைக்கு கிழக்கே உள்ள நெடுவயல் கிராமத்தில் இரண்டு யானைகள் புகுந்தன.
நெடுவயல் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. அங்கு ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஊருக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகளும் நள்ளிரவில் சிவராமபேட்டை அச்சன்புதூர் சாலை வழியாக வந்து நெடுவயல் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் காலையில் அந்த பகுதிக்கு சென்ற பொதுமக்கள் இரண்டு யானைகளையும் பார்த்து அச்சத்துடன் ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றி உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், காவல்துறை அலுவலகம் மற்றும் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட காலை முதல் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனாலும் அந்த யானைகள் அந்தப் பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீரில் மூழ்கி 2 யானைகளும் விளையாடிக் கொண்டிருக்கிறது. எனவே வனத்துறையினர் அந்தக் குளத்தை சுற்றி பொதுமக்கள் வாழும் பகுதி அதிகமாக வாழ்ந்து உள்ளதால் பகல் நேரத்தில் அதனை வனப்பகுதிக்கு விரட்டும் போது அந்த யானைகள் ஊருக்குள் புகுந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே நள்ளிரவில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த பிறகு வனத்துறையினர் அந்த இரண்டு காட்டுஸ யானைகளையும் வனப் பகுதிக்கு விரட்ட தயார் நிலையில் உள்ளனர்.மேலும் அந்த இரண்டு நேற்று பகல் முழுவதும் யானைகளையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் அந்தப் பகுதியில் வாழும் பொது மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அச்சன்புதூர் நெடுவயல் பகுதியில் முகாமிட்டுள்ளனர் மேலும் யானைகள் நடமாடும் அந்த பகுதிக்குள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சென்று விடாமல் தடுக்கும் வகையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தக் காட்டு யானைகளை வேடிக்கை பார்க்க ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அந்த பகுதிக்கு வருகை தந்தனர். மேலும் சிலர் அந்தக் காட்டு யானைகளை செல்போனில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் உலா விடுகின்றனர். அவர்களை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு செல்ல விடாமல் எச்சரித்து அனுப்பினார்கள்.

மேலும் காட்டு யானைகள் முகாமிட்டுள்ள பகுதிகளான அச்சன்புதூர், நெடுவயல், சிவராமப்பேட்டை, கொடிக் குறிச்சி, இடைகால், உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் மீது மின்வயர்கள் உரசினால் யானைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அந்த பகுதியில் மின்சாரத்தை தடை செய்துள்ளனர்.

மேலும் அந்தப் பகுதி பொதுமக்கள் இரவில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இரவில் அந்த இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தயார் நிலையில் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *