August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை- ஆட்சியர் தகவல்

1 min read

Student admission in Tenkasi district Industrial Training Institutes – Collector’s announcement

25.8.2026
தென்காசி மாவட்ட அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், தொடர்பாக தகவல் தெரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பித்தல், கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான வாயிலாக விண்ணப்பங்கள் இணையதளம் (https://skilltraining.tn.gov.in/detitiadm) 14.08.2026 உடன் நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி நேரடிச் சேர்க்கை செய்வதற்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவான Fitter (பொருத்துநர்). மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவான பம்ப்மெக்கானிக், ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன. மேலும் தொழிற்நுட்பமையம் 4.0 திட்டத்தின்கீழ், ஓராண்டு தொழிற்பிரிவான Industrial Robotics and Digital Manufacturing Technician NCVT (தொழிற்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பவல்லுநர்). தொழிற்பிரிவு உள்ளது. விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை பாஸ்போர்ட்சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் கடையநல்லூர், வீரகேரளம்புதூர் மற்றும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்திற்கு நேரில் அணுகவும். பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம்ரூ.750/- விலையில்லா மடிக்கணினி (Laptop) மிதிவண்டி, சீருடைகள் தையல்கூலி மூடுகாலணிகள், பாடப்புத்தககங்கள், வரைபடகருவிகள், பஸ்பாஸ், சலுகைகட்டண ரெயில்பாஸ், ஆகியன வழங்கப்படும்.

மேலும் உணவு வசதியுடன் கூடிய விடுதிவசதி உண்டு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலமும்,மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலமும் உதவித்தொகை பெற்று வழங்கப்படுகிறது.

மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடையநல்லூர், வீரகேரளம்புதூர் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தென்காசியில் நேரில் தொடர்புகொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கடையநல்லூர்-04633-290270, 94990558019499055800, -04633 210962, 9944055798, 9487986-493, திறன் பயிற்சி அலுவலகம் 04633-298088

இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *