August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டம்- ஆட்சியர் பங்கேற்பு

1 min read

Tenkasi District Public Grievance Redressal Meeting – Collector Participates

25.8.2026

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.8.2026) மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் திங்கள் கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 497 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி,திட்ட இயக்குநர்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் செல்லத்துரை மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *