முதல் அமைச்சர் விஜய்க்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
1 min read
High Court warns Chief Minister Vijay.
25.8.2026
தேர்தல் வழக்கில் எதிர்மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து அங்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர், வாக்காளர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்தும், திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குகளை நிராகரிக்க கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதால், இரு வாரங்கள் அவகாசம் அளிக்குமாறு முதல்வர் விஜய் தரப்பில் கேட்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதபதி, ‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 86வது பிரிவின்படி, தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். கடந்த முறையே கூடுதல் அவகாசம் கிடையாது என்று கூறியிருந்தேன் என்றார். இதேபோன்று அமைச்சர் ஆதவ் தரப்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அவகாசம் கேட்கப்பட்டது.
அவகாசம் தர மறுத்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், ஆக.27ம் தேதிக்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.