August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

கடைநல்லூர்: மாடியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி

1 min read

Kadayanallur: Worker dies after falling from upper floor

25/8/2026
தென்காசி மாவட்டம், மேல கடைநல்லூர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி பலியானார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த மேலக்கடையநல்லூர் தர்மர் மகன் சுப்பிரஜோதி (வயது 45) உணவகத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
மேல கடையநல்லூர் பகுதியில் மனைவி மற்றும் குழந்தையுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார், இரவு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்குள்ள சுற்றுச் சுவற்றில் உட்கார்ந்து இருந்தார். பின் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உறவினர் உடனடியாக அவரை வீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அங்கு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்த சுப்பிரஜோதி மனைவி கவிதா சேந்தமரம் கிராமத்தில் தலையாரியாக பணியாற்றி வருகிறார் இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *