August 29, 2026

Seithi Saral

Tamil News Channel

இரவணசமுத்திரத்தில் மிலாடி நபி விழா

1 min read

Milad-un-Nabi Celebration in Ravanasamudram

28.8.2026
இரவணசமுத்திரத்தில் மிலாடி நபி விழா விருந்தோம்பல் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள இரவணசமுத்திரம் அண்ணாவி குடும்பத்தினர்
1912 இல் இருந்து 115 வருடமாக நடத்தி வரும் மிலாடி நபி விழாவில் 1500 பேருக்கு விருந்தளிக்கப்பட்டது.

விருந்தோம்பலில் தமிழக வெற்றி கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தார். ஐஎன்டியுசி தேசிய செயலாளர் அமீர்கான், இரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் புகாரி மீரா சாஹிப், தமிழக வெற்றிக் கழக செயற்குழு உறுப்பினர்கள் நண்பன் ராஜா, பத்மநாதன், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சிய காந்தன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் நியாஸ், வழக்கறிஞரணி ஸ்ரீராம், ஓய்வு பெற்ற ஆசிரியர் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருந்தோம்பலுக்கு வருகை தந்த அனைவரையும் தென்காசி மாவட்ட அரசு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் கௌரவ செயலாளர் மொன்னா முகமது சலீம் மற்றும் தமிழக வெற்றிக் கழக மாவட்ட வர்த்தக அணி இணை அமைப்பாளர் மொன்னா எர்சாத் முஹம்மது ஆகியோர் வரவேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *