தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
Advance petitions will be received at the Pethanadarpatti public outreach camp on the upcoming 10th.
தென்காசி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.09.2026 அன்று நடைபெறும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங்,தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.09.2026 செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளி க்கான அடையாள அட்டை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிகணக்கு புத்தகம், மார்பளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் சிறப்பு முகாமில், விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.