October 24, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆழ்வார்குறிச்சி அருகே டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி பாஜக நிர்வாகி மனு

1 min read

BJP functionary submits petition seeking removal of TASMAC shops near Alwarkurichi.

2.9.2026
தென்காசி மாவட்டம், கடையம் அருகில் காவூர் மற்றும் கல்யாணிபுரத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி கடையம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் வைகுண்ட ராஜா கலால் உதவி இயக்குநரிடம் மனு அளித்தார்.

மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
தென்காசி மாவட்டம் கடையம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதியில் செட்டிகுளம் கல்யாணிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை பள்ளிக்கு அருகில் 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த மதுபானக் கடை புகழ்பெற்ற சிவசைலம் திருக்கோயில் மற்றும் கடனநதி அணைக்கு செல்லும் வழியில் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் இரவு பத்து மணி முதல் பகல் 12 மணி வரை கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இவ்வழியாக பள்ளி செல்லும் மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு பலவித அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

மேலும், காவூரில் செயல்பட்டு வரும் மதுக்கடை பள்ளிக்கு அருகில் செயல்பட்டு வருகிறது. இக்கடையில் மது வாங்கி அருகிலுள்ள விளைநிலங்களில் அமர்ந்து மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை விவசாய நிலங்களில் எறிந்து செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் காயமடைந்து பாதிக்கப்படுகின்றன. மேலும், மாலை நேரங்களில் பள்ளி விட்டு வீடு திரும்பும் மாணவிகளுக்கு மது அருந்துபவர்களால் பெரும் அச்சுறுத்தல் உள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் கல்யாணிபுரம் மற்றும் காவூர் ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மக்களை போராடத் தூண்டாமல் அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

மனு அளித்த போது பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *