ஆரியங்காவு சோதனை சாவடியில் ரூ.13 லட்சம் சிக்கியது- 3 பேரிடம் விசாரணை
1 min read
Rs13 lakh seized at Aryankavu check-post; three persons questioned.
2/9/2026
தமிழக கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு பகுதியில் கலால் துறை சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகன சோதனையில ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 13 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரிடம் தீவிர விசாரணை வருகின்றனர்.
தமிழக கேரள எல்லையான ஆரியங்காவு கலால் துறை சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் இருந்த ஒரு பையில் ரூபாய் 13 லட்சம் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மேலும் அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக கலால் துறை அதிகாரிகள் ரூபாய் 13 லட்சத்தை பறிமுதல் செய்ததோடு அந்த வாகனத்தில் வந்த சேலம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, சின்னப்பன், சக்தி சுப்பிரமணியன், ஆகிய மூன்று பேர்களையும் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்தப் பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.