வருகிற 10-ந் தேதி பெத்தநாடார்பட்டி மக்கள் தொடர்பு முகாம் முன்னோடி மனுக்கள் பெறப்படும்.
1 min read
Advance petitions will be received at the Pethanadarpatti public outreach camp on the upcoming 10th.
2.9.2026
தென்காசி மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் பெத்தநாடார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முருகன்குறிச்சி சமுதாய நலக்கூடத்தில் 10.09.2026 முன்னோடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜித்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம் பெத்தநாடார்பட்டி பகுதி 1. பெத்தநாடார்பட்டி பகுதி-2 கிராமங்களுக்கு எதிர்வரும் 14.10.2026 இல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு எதிர்வரும் 10.09.2026 (வியாழக்கிழமை) அன்று பெத்தநாடார்பட்டி பகுதி 1 கிராமம், முருகன்குறிச்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து காலை 10.00 மணி முதல் முன்னோடி மனுக்கள் பெறப்படவுள்ளது.
எனவே பெத்தநாடார்பட்டி பகுதி 1. பெத்தநாடார்பட்டி பகுதி-2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மேற்படி முகாமில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பான விண்ணப் பங்களை வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.