September 3, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் திறக்க வாய்ப்பு- இராம.உதயசூரியன் தகவல்

1 min read

Tenkasi District Collector’s Office likely to open soon – Rama Udhayasooriyan

2.9.2026
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ரூபாய் 119 கோடி செலவில் கட்டப்பட்டு மாசு கட்டுப்பாட்டு பல ஆண்டுகள் ஆகியும் பசுமை தீர்ப்பாயம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலையீடு காரணமாக இன்று வரை திறக்கப் படவில்லை.

இந்நிலையில் நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர் இராம. உதயசூரியன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உறுப்பினர் செயலர் கோபகுமாரை சமூக ஆர்வலர் இராம. உதயசூயன் சந்தித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு சம்பந்தமான கோரிக்கையை முன்வைத்து பேசினார்.

.அவர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை.எனவே நீதிமன்றத்தை நாடுவது என்று முடிவெடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 32379/2025 எண் கொண்ட வழக்கை தொடர்ந்தேன்.பல கட்ட விசாரணைக்கு பின்னர் நேற்று இறுதி விசாரணை நடைபெற்றது.பொதுப்பணித்துறை சுற்றுச்சூழல் துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சார்பில் பதில் உரைகள் தாக்கல் செய்யபட்டு நேற்று விவாதம் நடைபெற்றது

இந்த வழக்கில் சமூக ஆர்வலர் இராம . உதயசூரியன் தரப்பில் வழக்கறிஞர் தேசிகன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கின் முக்கிய நோக்கம் நீண்ட காலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் அரசுதுறைகளே என்பதை முன் வைத்து வாத பிரதிவாதங்கள் நடைபெற்றது.

பொதுப்பணித்துறை நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுத்தோம் சுற்றுச்சூழல் துறை காலதாமதம் செய்துவிட்டது இதனால் எங்களுக்கு நிறைய அவசியமற்ற செலவினங்கள் ஆகியிருக்கிறது என்றும் இப்போதும் ஆட்சியர் அலுவலக மறுசீரமைப்பு செலவிற்கு ம் ரூ.4 .5கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணியை செய்து முடிக்க தயாராக இருக்கிறோம் என்று பதில் அளித்தனர்.

சுற்றுச்சூழல்துறை சார்பில் உச்சநீதிமன்ற வரையறைகள் எஸ்.ஓ.பி.வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதை நீதியரசர்கள் கவனத்தில் எடுத்து விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அலுவலகத்தை திறக்க தேவையான அனுமதியை வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து விசாரணையை முடித்து வைத்துள்ளனர்.

எனவே இனிமேல் சுற்றுச்சூழல் துறை அனுமதி நீண்ட நாள் தள்ளிபோக வாய்ப்பில்லை. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சம்பந்தமான கோப்புகள் மீதான நடவடிக்கை மட்டுமே என்பதால் விரைவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் புதிய அரசு ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு சமூக ஆர்வலர் இராம.உதயசூரியன் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *