September 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம்: குரங்குகளை பிடிக்க கூண்டு

1 min read

Kadayam: Cage to catch monkeys

4/9/2026
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியில் சமீபகாலமாக குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் பெருந்துயரத்தில் உள்ளனர்.

இதையடுத்து, வனத்துறை துணை இயக்குநரின் அறிவுறுத்தலின்படி வனச்சரகர் ஜெயபிரகாஷ் தலைமையிலான வன ஊழியர்கள் குரங்குகளை பிடிக்க கீழக்கடையத்தில் கூண்டு வைத்துள்ளனர்.
இதற்கு முன்பும் பலமுறை கூண்டுகள் வைத்தும் குரங்குகள் பிடிப்படாத நிலையில் இப்போது மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

இம்முறை கூண்டுக்குள் சிக்குமா அந்த குரங்குகள் என்று ஆவலுடன் பொதுமக்கள் காத்து இருக்கிறார்கள். வனத்துறையினரும் இம்முறை கண்டிப்பாக அந்த குரங்குகள் கூண்டுக்குள் வரும் அதனை பாதுகாப்பாக வனப்புகுதியில் கொண்டு விட்டுவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *