September 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

1 min read

Thoothukudi: Life imprisonment for four convicts in murder case

4/9/2026
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் – II தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்தூர் காட்டுபகுதியில் வைத்து அய்யாபிள்ளை மகன் பாலசுந்தரகணபதி என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டப்பிடாரம், மேலமருதூர் பகுதியை சேர்ந்தவர்களான குமாரவேல் மகன் பண்டாரம் (வயது 65), அவரது மகன் ராஜேஷ்(35), முனியசாமி மகன் வசந்த்(28) மற்றும் காசிராமலிங்கம் மகன் முத்துராஜ்(27) ஆகிய 4 பேரையும் குளத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில்- II (ADJ-II) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி பிரீதா நேற்று பண்டாரம், ராஜேஷ், ராவேசந்த் மற்றும் முத்துராஜ் ஆகிய 4 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *