தருவை தேவாலயம் கண்காட்சியில் பிரியாணி சாப்பிட்ட 64 பேருக்கு வாந்தி
1 min read
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;
64 people who ate biryani at the Tharuva Church exhibition suffered from vomiting.
6.9.2026
தூத்துக்குடி அருகே உள்ள தருவை தேவாலயம் கண்காட்சியில் மட்டன் பிரியாணி சாப்பிட்ட 64 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்
தூத்துக்குடி அருகேயுள்ள, தருவைகுளம் மீனவ கிராமத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயம் உள்ளது இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் பைபிள் கண்காட்சி நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டுக்கான பைபிள் கண்காட்சி இன்று காலை 9 மணியிலிருந்து 3 மணி வரை நடந்தது இந்த பைபிள் கண்காட்சியில் தருவைகுளம் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் சுமார் 10,000 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
கண்காட்சியை காண வந்தவர்களுக்கு தேவாலயம் சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இதில் 500 க்கும் மேற்பட்டவர்கள் பிரியாணி சாப்பிட்டதாக தெரிகிறது
பிரியாணி சாப்பிட்ட தருவைகுளம் மக்கள் மாலை 5 மணி முதல் திடீரென தங்களது வீட்டில் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக அவர்களை தனியார் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்ந்தனர்.
இதில் கிராமத்தில் உள்ளவர்கள் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 64 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர் உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்ந்தனர் அங்கே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஆனால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் செவிலியர் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியவில்லை மேலும் அவசர சிகிச்சை வார்டில் படுக்கைகள்அதிகளவில் இல்லாததால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர் ஆனாலும் ஒரு பெட்டில் மூன்று பேர் வீதம் படுக்க வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தருவைகுளம் காவல் நிலைய போலீசார் தருவைகுளம் கிராமத்தைச் சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் தூத்துக்குடி தாசில்தார் ஆகியோர் கிராமத்துக்கு சென்று கோவிலில் மீதி இருந்த பிரியாணியை சோதனைக்கு எடுத்து அனுப்பி உள்ளனர். மேலும் மதியம் சமைக்கும்போது பிரியாணியில் பல்லி அல்லது எலி எதுவும் செத்து விழுந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தருவைகுளம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.