பாவூர்சத்திரம்: பாலியல் சீண்டல்- இந்து முன்னணி பிரமுகர் கைது
1 min read
Pavoorchatram: Hindu Munnani functionary arrested for sexual harassment
6/9/2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலபட்டணம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் கைது
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் வேதம்புதூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது47). கீழப்பாவூர் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர். மனைவி, மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் அவர் மற்றொரு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிங்கப்பெண் அதிரடிப்படையில் அந்தபெண் புகார் அளித்தார். பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்தனர்.