சடையப்பபுரத்தில் வீத லீடர்ஸ் அமைப்பின் சார்பில் மரக்கன்று
1 min read
Tree saplings planted in Sadaiyappapuram on behalf of the Veetha Leaders organization.
6.9.2026
வீத லீடர்ஸ் அமைப்பின் முதல் சேவகர் கே.அண்ணாமலை அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் குலசேகரபட்டி பஞ்சாயத்து சடையப்பபுரத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் புங்கமரம், சந்தனமரம், வேங்கை , எலுமிச்சை, செம்மரம், உள்ளிட்ட பல வகையான மரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஊர் பொதுக் கோவிலான முப்புடாதி அம்மன் கோயில் அருகில் மரம் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆறுமுகம் &முருகேசன் எம்.ராமர், மாரிச்செல்வம், இருளப்பன் வி.வைரமுத்து, ஆர்.கண்ணன் திருமலை குமார், எம்.எஸ்.மாடசாமி, எம். துரை தி.கணபதி தி.மாரி, எம். முருகன், ப.முத்துக்காளை, பி.லட்சுமண குமரன், எஸ்.எம்.சிவா, எம்.லட்சுமனன் பி.படையப்பா, பி.பேச்சிமுத்து வி.மகேஸ்வரன், எஸ்.குமார் எம்.திருப்பதி ஆகியோர் பங்குபெற்றனர்