சங்கரன்கோவிலில் வ.உ.சி. பிறந்தநாள் விழா
1 min read
V.O.C. Birth Anniversary Celebration in Sankarankovil
6.9.2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவில் வ உ சி இளைஞர் அணி சார்பில் 155 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது
இந்த விழாவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வ.உ.சி. யின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் தெற்கு தெரு வீரக்கொடி வெள்ளாளர் சமுதாய தலைவர் மாரியப்பன், செயலாளர் ஆர்.சி மாரியப்பன், பொருளாளர் வீரப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், ரமேஷ், முத்துப்பாண்டி, வழக்கறிஞர் ராமேஸ்வரன், கிளைக் கழகச் செயலாளர் பாபு கதிரேசன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுடலை சங்கர், துணைச் செயலாளர் செல்லத்துரை, அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் அலெக்ஸ்,நகர் மன்ற உறுப்பினர் அண்ணாமலை புஷ்பம் மற்றும்
வ உ சி இளைஞரணியினர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.