September 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் பாரதி, காந்தி, விவேகானந்தர் தின விழா; மாணவ-மாணவிகளுக்கு பரிசு

1 min read

oplus_131074

Celebrations marking the days of Bharathi, Gandhi, and Vivekananda held in Kadayam; prizes awarded to students.

11.9.2026

சேவாலயா அமைப்பின் சார்பில், கடையத்தில் உள்ள செல்லம்மா-பாரதி கற்றல் மையம் மற்றும் கிளை நூலகத்தில் பாரதி, காந்தி, விவேகானந்தர் தின விழா 2 நாள் கொண்டாடபட்டது. இதில் முதல் நாள் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இரண்டாவது நாள் நிகழ்ச்சி இன்று (11-ந் தேதி ) நடந்தது.
காலை 10 மணிக்கு செல்லம்மா – பாரதி திருவுருவச் சிலைகளுக்கும், அதனைத் தொடர்ந்து பாரதி, காந்தி மற்றும் விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
​இதனைத் தொடர்ந்து, செல்லம்மா பாரதி கலாநிலைய மாணவர்களின் துவக்கப் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவிற்கு வந்திருந்தவர்களைச் சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் முரளிதரன் வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர். கடையம் கிளை நூலகர் நல்நூலகர் மா. மீனாட்சி சுந்தரம், பாரதி வாசகர் வட்டத் தலைவர் ஆ. சேதுராமலிங்கம் மற்றும் கடையம் வியாபாரிகள் சங்கச் செயலாளர் ஷேக் முகமது கான் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை வாழ்த்திப் பேசினர்.

​சிறப்புரை

​தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், சத்திரம் செல்லம்மா பாரதி பெண்கள் உயர்நிலைப்பள்ளிச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான வேங்கட ரமணா, மற்றும் செல்லம்மாளின் மருமகன் சுந்தர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில், தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் பேசினார்கள். ​ஸ்ரீ சுதா (10-ஆம் வகுப்பு, சத்திரம் பாரதி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கடையம்), கீர்த்தி (5-ஆம் வகுப்பு, எஸ்.டி.சி. கிளை தொடக்கப்பள்ளி, ஆழ்வார்குறிச்சி), மாலினி (5-ஆம் வகுப்பு, எஸ்.டி.சி. கிளை தொடக்கப்பள்ளி, ஆழ்வார்குறிச்சி) ​ஆகியோர் பேசினார்கள்.

பரிசளிப்பு

oplus_131072

​இதனைத் தொடர்ந்து, மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த வெற்றியாளர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
​விழாவின் நிறைவில் க. சோ. கல்யாணி சிவகாமிநாதன் நன்றியுரையாற்றினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *