September 17, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடி பிறந்தநாள்- தலைவர்கள் வாழ்த்து

1 min read

Prime Minister Modi’s Birthday – Leaders Extend Wishes

17.9.2026
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக்குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, மற்றும் பல மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பிரதமர் மோடி நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்கவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,” மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

நாட்டிற்கான அவரது அயராத சேவை, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் மேம்படுத்துவதற்கான அவரது இடைவிடாத உத்வேகம் ஆகியவை லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. அவரது நல்ல ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *