September 27, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி, கடையநல்லூரில் 4984 பேர் குடிமைப் பணிகள் தேர்வு எழுதுகிறார்கள்

1 min read

4,984 candidates are taking the civil services examination in Tenkasi and Kadayanallur.

25/9/2026
தென்காசி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி -I பணிகள்) தேர்வு தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 27.09.2025 அன்று முற்பகல் மட்டும் நடைபெறஉள்ளது.

மேற்படி தேர்வினை தென்காசி மற்றும் கடையநல்லூர் வட்டங்களில் உள்ள 16 தேர்வு மையங்களில் மொத்தம் 4984 தேர்வர்கள் எழுதவுள்ளனர். இத்தேர்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் நடைபெறும்.

தேர்வர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன் காலை 8.30 க்குள் சென்று தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு அறையை உறுதிசெய்துகொள்ள வேண்டும். மேலும் காலை 9.00 மணிக்கு மேல் வருகைதரும் தேர்வர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் தேர்வு அறைக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச். புளுடுத் டிவைஸ், உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை. சாதாரண அனலாக் கைக்கடிகாரம் மட்டும் அனுமதிக்கப்படும். மேலும் தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு செல்ல போதிய அளவில் பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே தேர்வர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்வெழுதிடும்படி மாவட்ட ஆட்சியர் தரஞ்ஜீத் சிங், இ.ஆப, கேட்டுக்கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *