கடையம் அருகே பெட்ரோல் குண்டு வீசிய 5 சிறுவர்கள் கைது
1 min read
Five juveniles arrested for hurling a petrol bomb near Kadayam.
28/9/2026
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பாப்பான் குளத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற் பட்ட தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி யதாக ஐந்து சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்,
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி (வயது 20). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவர்களிடம் ரூ. 500 கடனாக வாங்கியிருந்தாராம். அந்தப் பணத்தை திரும்பக் கேட்டும் கொடுக்கவில்லையாம். இதையடுத்து சில நாட்களுக்கு முன் இரு தரப்பினரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கி காயமடைந்துள்ளார். ஆழ்வார்குறிச்சி காவல் இதுகுறித்து நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் இசக்கி வீட்டின் மீது இரண்டு பெட்ரோல் நிரம் பிய பாட்டிலை வீசியுள்ளனர். இதில் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது, ஒன்று தீப்பிடிக்கவில்லை.
இதுகுறித்து இசக்கி ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 சிறுவர்களை கைது செய்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி காவல் ஆய்வாளர் கலா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.