October 2, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனரை கண்டித்து போராட்டம்: 700 பேர் கைது

1 min read

Protest in Delhi against the Chief Election Commissioner: 700 people arrested.

2.10.2026
டெல்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் உட்பட, 700க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

நாடு முழுதும் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் குளறுபடி நடந்ததாகக் கூறி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரி, தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், அக்., 2ல் போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன. இதற்கு அனுமதி மறுத்த டெல்லி போலீசார், அப்பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில், அக்., 2ம் தேதியான இன்று, தடையை மீறி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர், மாணவர்கள் முயன்றனர். முன்னெச்சரிக்கையாக, அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போராட்டத்திற்கு செல்ல முயன்ற ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், நார்த் அவென்யூ பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், அக்கட்சியின் முக்கிய தலைவர்களான ஆதிஷி, சவுரப் பரத்வாஜ், சஞ்சீவ் ஜா உள்ளிட்டோரும் போலீசாரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

இதே போல், இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம், காங்கிரசின் மாணவர் அமைப்பான, இந்திய தேசிய மாணவர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அசோகா ரோடு ரவுண்டானா வழியாக ஜந்தர் மந்தரை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற, 500க்கும் மேற்பட்ட மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களை கைது செய்தனர். பிரோஸ் ஷா சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றதால், அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அசம்பாவிதங்களை தவிர்க்க, மத்திய டெல்லி பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கையாக, மத்திய டெல்லியில் உள்ள பல முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *