தென்காசியில் வெற்றிப் பயணம் திட்டம்- ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்
1 min read
‘Vetri Payanam’ (Journey to Success) scheme in Tenkasi – Collector Ranjith Singh inaugurates it.
2.10.2026
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேற்று 2.10.2026 வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், புதிய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்து மகளிர் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுடன் பேருந்தில் பயணித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 24.8.2026 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூக நீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி. பெருமளவில் பயனளித்திடும் விதமாக, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அதனடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள 7 போக்குவரத்துக் கழகங்களின் மாநகர், நகர்புற சாதாரணப் பேருந்துகள் மற்றும் மலைப் பகுதிகளில் 40 கி.மீ. வரை மட்டுமே மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்துவந்த நிலையில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து, இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் ஆகியவற்றிற்கும் விரிவுப்படுத்தப்பட்டு, மொத்தமாக 12,695 பேருந்துகளில் மகளிர் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. கட்டணமில்லாமல்
இதன்மூலம், 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 12,695 பேருந்துகள் வெற்றிப் பயணத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு, 168,500 நடைகள் இயக்கப்படும். இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 இலட்சம் மகளிர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தால், தமிழ்நாடு முழுவதும் மகளிர் எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். மேலும், மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் மற்றும் திருநர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கும் கட்டணமின்றிப் பேருந்துகளில் பயணிக்க இயலும்.
இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(திலி) வது, திருநெல்வேலி மண்டலம் மூலம், தென்காசி கிளைகள், சங்கரன்கோவில் கிளைகள், புளியங்குடி கிளைகள், செங்கோட்டை கிளைகள் ஆகியற்றில் நகர் பேருந்துகள் 82, புறநகர் பேருந்துகள் 151 என மொத்தம் 233 பேருந்துகளில் இவ்வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது. தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, கோவில்பட்டிபுளியங்குடி,அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கும், சங்கரன்கோவிலிலிருந்து திருநெல்வேலி, கோவில்பட்டி, இராஜபாளையம், தென்காசி ஆகிய பகுதிகளுக்கும், புளியங்குடியிலிருந்து சுரண்டை, தென்காசி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளுக்கும். சுரண்டையிலிருந்து புளியங்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கும் மகளிர் வெற்றிப் பயண புறநகர் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திருரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைமுனைவர்.ஆ.ரா.
சிவராமன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.