பெண்களுக்குப் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம்; அண்ணாமலை உறுதி
1 min read
We will create a safe society for women; Annamalai pledges.
2.10.2026
பெண்களுக்குப் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜூலை மாதத்தில் ‘போதை இல்லா தமிழகம்’, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ‘தூய்மையான மற்றும் நிலையான தமிழகம்’ என்ற நோக்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட நமது சமூகப் பணிகளின் தொடர்ச்சியாக, தற்போது அக்டோபர் மாதம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பாக வாழ்வது மட்டுமல்ல, தங்களிடம் இருக்கும் திறமைகளை உணர்ந்து, கல்வி கற்று, பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று, உடல் மற்றும் மனநலத்துடன் வாழ்ந்து, தங்களுடைய உரிமைகளை அறிந்து, சமூகத்தின் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் சமமான பங்களிப்பை வழங்கக்கூடிய உருவாக்குவதே, இந்த மாதத்தில் மேற்கொள்ளவிருக்கும் பணிகளின் நோக்கம்.
இந்த அக்டோபர் மாதம், பெண்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் மனநலம், நீதி, கல்வி, பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூக, அரசியல் பங்கேற்பு ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்துப் பேசுவோம். பெண்கள் இன்று எதிர்கொள்ளும் உண்மையான பிரச்னைகளை அடையாளம் காண்போம்.
அவற்றிற்கான நடைமுறைத் தீர்வுகளைப் பற்றி விவாதிப்போம். செயல்படுத்துவோம். பெண்களுக்குப் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம். மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்; பாதுகாப்பான, சமத்துவமான தமிழகம் பிறக்கட்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.