October 3, 2026

Seithi Saral

Tamil News Channel

மகளிர் வெற்றி பயண திட்டம்; பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கினார் முதல்வர் விஜய்

1 min read

‘Women’s Journey to Success’ scheme launched; Chief Minister Vijay distributed free tickets to women

2.10.2026
அரசு பஸ்களில் கட்டணமில்லா வெற்றிப்பயணம் விரிவாக்க திட்டத்தை சென்னை-காஞ்சிபுரம் பஸ்சில் முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்.
சென்னை கோயம்பேட்டில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு முதல்வர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு அரசு பஸ்களில் கட்டணமில்லா வெற்றிப்பயணம் விரிவாக்க திட்டத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்.
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பஸ்சில் ஏறிய அவர், பெண் பயணிகளுக்கு கட்டணம் இல்லாத டிக்கெட் வழங்கி வாழ்த்துக்கூறினார்.

மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கும், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ், அரசு பஸ்கள், புறநகர் சாதாரண பஸ்கள் மற்றும் 40 கி.மீ.,க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பஸ்கள் என, 12 ஆயிரத்து 692 பேருந்துகளில், இலவசமாக மகளிர் பயணம் செய்யலாம்.

இத்திட்டத்தின் மூலம் தினமும் 84.32 லட்சம் பெண் பயணிகள் பயனடைவார்கள்; மாநிலம் முழுவதும் தமிழக மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *