மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
1 min read
By-election campaigning concluded in Maduranthakam and Dharapuram.
4.10.2026
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், வரும், 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. 9ம் தேதி ஒட்டு எண்ணிக்கை நடக்கிறது.
பிரசாரத்தின் கடைசி நாளான இன்று தாராபுரத்தில் பல இடங்களில் முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். இரு தொகுதிகளிலும் அமைச்சர்கள் கடைசி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
தாராபுரம் தொகுதியில் உரிய அனுமதி பெறாமல் பிரசாரம் மேற்கொண்டதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார். இதனால் அக்கட்சியினர் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பிரசாரம் ஓய்ந்த நிலையில்,” மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இருந்து, வெளியூர் நபர்கள் இன்று மாலை 6:00 மணிக்குள், வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்களில், வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும். வாக்காளர்களை அழைத்து வர, வேட்பாளர்கள் எந்த வாகன ஏற்பாடுகளையும் செய்யக்கூடாது. ஓட்டுச்சாவடியிலிருந்து, 100 மீட்டருக்கு வெளியே, வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் அமைக்கலாம். அதில், இரண்டு பேர் மட்டுமே இருக்க வேண்டும்,” என தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.