October 5, 2026

Seithi Saral

Tamil News Channel

சிவாஜி கணேசன் 99 -வது பிறந்த நாள்: மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

1 min read

Sivaji Ganesan’s 99th Birth Anniversary: ​​District-level Speech Competition

4/10/2026
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி ஆணையின்படி, தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி குத்துக்கல்வலசையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ் தலைமையிலும், மாவட்ட அமைப்பாளர்கள் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா, மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் ஆர்.எஸ்.கே.துரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன்,
மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், தொழிலாளர் யூனியன் மாநில பொதுச் செயலாளர் செங்கை கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

பேச்சுப் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 31 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் செங்கோட்டை வட்டம் வடகரை முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவி முஸ்ஃபிரா முதலிடத்தை பிடித்து மாநில அளவிலான பேச்சுப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவருக்கு செங்கோட்டை வட்டார காங்கிரஸ் நிர்வாகி
செ. புதூர் மாரியப்பன் சார்பாக ரூ.5,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்த மாணவி வரும் 2026 அக்டோபர் ஒன்றாம் தேதி, அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறார். 2 வது பரிசினை தென்காசி மஞ்சம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவி மோனிகா பெற்றார். இவருக்கு மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்‌.சுப்பிரமணியன் சார்பாக ரூ.3,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 3வது பரிசினை செங்கோட்டை வட்டம் நெடுவயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் அக் ஷய் மகாதேவன் பெற்றார். இவருக்கு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன்* சார்பாக ரூ.2,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு பரிசாக கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவி ரசினா பாத்திமாவுக்கு ரூ.1,000 ரொக்கப் பரிசினை மாவட்ட மகளிர் அணி தலைவி பூமாதேவி முருகன் சார்பாக வழங்கப்பட்டது.

மேலும் மீதமுள்ள 28 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ரொக்கப் பரிசுக கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் பாண்டியன், கடையநல்லூர் நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் ரமேஷ், மாவட்ட கலைப் பிரிவு தலைவர் இலஞ்சி முருகன் ஆகியோர் சார்பாக iவழங்கப்பட்டது.

இந்த பேச்சுப் போட்டியின் நடுவர்களாக ஆர்.எஸ்.கே.துரை, மற்றும் செங்கோட்டை ஐயப்பன் இருவரும் செயல்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் முகமது உசேன், மாவட்ட செயலாளர்கள் ரவி, மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட தலைவர் ராஜீவ் காந்தி, தமிழ்நாடு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அருணாச்சலம், தொழிலாளர் யூனியன் தென்காசி சட்டமன்ற தொகுதி தலைவர் மகேஷ், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் முத்துக்குமார், செங்கோட்டை நகர பொருளாளர் சங்கரலிங்கம், செங்கோட்டை நகர தொழிற்சங்க தலைவர் செல்வக்கணபதி,தென்காசி நகர பொருளாளர் ஈஸ்வரன், துணைத் தலைவர் தேவராஜன், கொடிக்குறிச்சி வெள்ளத்துரை , சிங்கத்துரை, சிவராமபேட்டை ராமமூர்த்தி, கணக்கப்பிள்ளை
வலசை ரமேஷ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், ஆயிரப்பேரி மூர்த்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் குருநாதன், அசன் இப்ராஹிம், முத்து, செல்வக்குமார், மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *