நெல்லையில் மூதாட்டியிடம் செயின் பறித்தவர் கைது
1 min read
Chain snatcher arrested for stealing from elderly woman in Nellai
4.10.2026
நெல்லை மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க செயினை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊருடையார்புரம் பகுதியை சேர்ந்த ஜெயராணி (வயது 60) என்பவர் கடந்த 13.9.2026 அன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பைக்கில் வந்த நபர் ஒருவர், மேற்சொன்ன மூதாட்டியிடம் வழி கேட்பது போல அருகில் சென்று அவர் அணிந்திருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புடைய 2.5 சவரன் தங்க செயினை பறித்து சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கொண்டாநகரம் பகுதியை சேர்ந்த ரமேஷ்(எ) ராமையா (வயது 42) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து, அவரிடமிருந்து 14 கிராம் தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.