October 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் பெண்கள் தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் உதவி

1 min read

Loan assistance of up to ₹5 crore for women to start businesses in Tamil Nadu

4.10.2026
வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வகுத்துள்ளது.

தமிழக அரசு பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது:

தமிழ்நாட்டில் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவோடு, சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது உங்களுக்கான நேரம். முதல்-அமைச்சர் விஜய் தலைமையில், பெண்களைத் தொழில்முனைவோராக மாற்றவும், அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கவும் நாங்கள் மற்றொரு முக்கிய முன்னெடுப்பை எடுத்துள்ளோம். ‘வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ், தகுதியான பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் கொண்டு செல்கிறோம்.

ஒவ்வொரு தொகுதியிலும் தொழில் தொடங்க ஆர்வமுள்ள 10 திறமையான பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் விண்ணப்பங்களை எங்கள் அலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முழு ஆதரவு வழங்கப்படும். பெண்கள் அதிகாரம் பெற்று பொருளாதாரத்தில் முன்னேறும்போதுதான் தமிழ்நாடு உண்மையான வளர்ச்சியை அடையும். நமது கனவுகளைத் தொழில்களாக மாற்றுவோம். அந்தத் தொழில்களை நமக்கான சிறந்த வாய்ப்புகளாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இந்தத் திட்டத்தின் தகுதிகள் குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு நிதியுதவித் திட்டம்.

தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலம் வாங்குவதற்கும், திட்டம் சார்ந்த கட்டிடங்களைக் கட்டுவதற்கும், இறக்குமதி செய்யப்பட்ட அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய எந்திரங்கள் மற்றும் சாதனங்களை வாங்குவதற்கும் இந்த நிதியுதவி வழங்கப்படும்.

மகளிர் தொழில் முனைவோரால் தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 51 சதவீத பங்குரிமையைக் கொண்டுள்ள தனியுரிமை- ஒரு நபர் நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை நிறுவனங்கள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்.

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் முதன்முறை தொழில் முனைவோருக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும்.

குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி.

புதிய நிறுவனங்கள் திட்டச் செலவில் 20 சதவீதம், ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் திட்டச் செலவில் 15 சதவீதம்.

தற்போது ஆண்டுக்கு 9.95 சதவீதம்

மாதத் தவணையில் கடனை 9 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தலாம். அதில் 2 ஆண்டுகள் வரையிலான தவணை ஒத்திவைப்புக் காலமும் அடங்கும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தரவரிசை 7-க்குள் இருக்க வேண்டும். தனிநபர் 600-க்கு மேல் இருக்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான தரவரிசை 7-க்குள் இருக்க வேண்டும். தனிநபர் 600-க்கு மேல் இருக்க வேண்டும்.

புதிய மற்றும் 3 ஆண்டுகளுக்கும் குறைவாகவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கு அசையாச்சொத்து வடிவில் கடன் தொகையில் 40 சதவீதம் இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தொழில் நிறுவனங்களுக்கு கடன் தொகையில் 20 சதவீதம் இருக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டணம்
இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் கடன்களுக்கு ஆய்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

இவ்வாறு வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *