October 5, 2026

Seithi Saral

Tamil News Channel

காலை உணவு திட்ட கண்காணிப்புக்காக காலை 7 மணிக்கு பணிக்கு வர உத்தரவு; ஆசிரியர்கள் எதிர்ப்பு

1 min read

Order issued for teachers to report for duty at 7 AM to monitor the breakfast scheme; teachers oppose the move

4.10.2026
காலை உணவு திட்டக்கண்காணிப்புக்கு ஆசிரியர்கள் காலை 7 மணிக்கே பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தைக்கண்காணிக்க ஆசிரியர்கள் காலை 7 மணிக்கே பள்ளிக்கு வருகை கர வேண்டும் என்ற அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சா. அருணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது:-
மாணவர்களின் ஏழ்மை நிலையைக்கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பைத் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை நீட்டிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியன்று தமிழ்நாடு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை உணவுத்திட்டத்தை நாள்தோறும் கண்காணிக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் காலையில் 7 மணிக்கே பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பல ஆசிரியர்கள் 40 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பணிக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், காலை 7 மணிக்கே பள்ளிக்கு வருவது என்பது மிகவும் சிரமமான செயலாகும் என்று அறிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *