கடையம் திருவள்ளுவர் கழக ஆண்டு விழா- மாணவ-மாணவிகளுக்கு பரிசு
1 min read
Kadayam Thiruvalluvar Kazhagam Annual Function – Prizes for Students
5.6.2026
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் ஆண்டு விழா நடராஜ் மகாலில் கடந்த ஞாயிறறுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு திருவள்ளுவர் தலைவர் ஆ. சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் ந. கனகசபாபதி, கடையம் வியாபாரிகள் சங்கப் பொருளாளரும் கழக மதிப்புறு ஆலோசகருமான க. பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக கழகச் செயலாளர் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து க.சங்கரநாராயணன் “ஒரு குறள் சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக துணைத் தலைவர் ச. மாடசாமி, அம்பாசமுத்திரம் திருக்குறள் அறக்கட்டளைப் பொருளாளர் புன்னைவன நாறும்பூநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், கடையம் வட்டாரப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பு இடம் பிடித்த மாணவர்களுக்கும், ‘இயன்றதை செய்வோம் இயலா தவர்க்கே’ குழுவினருக்கும் கௌரவிப்பு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
விழாவின் முக்கிய அம்சமாக ‘வள்ளுவர் காட்டும் இல்லற நெறிகளைப் பெரிதும் போற்றுவோர் ஆண்களே! பெண்களே!’ என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இதற்கு வ. பாமணி தலைமை தாங்கினார்.
ஆண்களே! என்ற அணியில் ஆ. பாலன், த. அந்தோணிராஜ், மு வேலுகோ ஆகியோரும்,
பெண்களே! என்ற அணியில் கி. ராமலட்சுமி, ரா. சங்கரகோமதி என்ற ப்ரியா, கோ. அனிதா ஷிபா லில்லி ஆகியோரும் பங்கேற்றுத் தங்களது சுவையான வாதங்களை முன்வைத்தனர்.
நிறைவாக, கழக இணைச் செயலாளர் செ.சோம சுந்தரம் நன்றியுரை கூறினார். இவ்விழாத்திற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் கழகத்தின் நிர்வாகிகள், கோபால், இந்திரஜித், சின்னச்சாமி உள்பட பலர் செய்திருந்தனர்.