கடையத்தில் தேமுதிக முப்பெரும்விழா பொதுக்கூட்டம்
1 min read
DMDK’s Grand Triple-Event Public Meeting in Kadayam
6/10/2026
தென்காசி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கடையம் சின்னத்தேர் திடலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமையேற்று 80 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடையம் ஒன்றிய தேமுதிக செயலாளர்கள் வேதக்கண்ணு தங்கசாமி, சுப்பையா சரவணன், முருகன் வரவேற்புரையாற்றினர். ரமேஷ், ஆனந்த் அருணா ஆகியோர் சிறப்புரை யாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாதவன் பிரின்ஸ், சந்துரு சுப்பிரமணியன், கணேசன், சரவணன் துணைத்தலைவர் கார்த்திக், மாவட்ட மகளிரணி செயலாளர் சண்முகத்தாய், மயிலம்மாள், தென்காசி தெற்கு மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் மாவட்ட விவசாய அணி செயலாளர் காமராஜ் மோகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.