ஆவுடையானூரில் இலவச மருத்துவ முகாம்
1 min read
Free medical camp at Auvudaiyanur
6/10/2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள
ஆவுடையானூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்
100-க்கும் மேற்பட்டோருக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டது.
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரில் அமைந்துள்ள ஏ.பி. கிளினிக் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் மருத்துவர்கள் சிபி பீட்டர், ஷைனி சிபி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை, ரத்த அழுத்தம் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, உயரம் மற்றும் எடை பரிசோதனை, இதய நலன் மற்றும் பொது நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், நுரையீரல் மற்றும் சுவாசம் தொடர்பான ஆலோசனை, பெண்கள் நல ஆலோசனை, குழந்தைகள் நல கண்காணிப்பு, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் தொடர்பான தொடர் கண்காணிப்பு, உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மனநலம் மற்றும் மன அழுத்தத்தை கையாள்வது குறித்தும் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றனர்.
முகாமில் ஒன்றிய தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.பி. ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ஏ.பி. கிளினிக் நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.