October 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்களுக்கு மானியம்

1 min read


Tenkasi: Subsidy for Christians returning from the holy pilgrimage to Jerusalem.

6/10/2026
தென்காசி மாவட்டம் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் -மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தகவல்

தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/-வீதமும், 50 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.012027-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம். சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்புமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *