தென்காசியில் மோடி 25 ஆண்டு சேவா ஜோதி யாத்திரை
1 min read
Modi’s ‘Seva Jyothi Yatra’ Marking 25 Years of Service in Tenkasi
7.10.2026
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் மற்றும் நாட்டின் பிரதமராக தொடர்ந்து 25 ஆண்டுகள் மக்கள் சேவையை நிறைவு செய்ததை முன்னிட்டு, தென்காசியில் பாஜக சார்பில் மோடி 25 ஆண்டு சேவா ஜோதி யாத்திரை விக்சித் பாரத் சங்கல்ப் சபா நடைபெற்றது.
வருகிற 2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் இலக்கை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள் செல்வம், பால சீனிவாசன், மாவட்ட பொருளாளர் *கோதை மாரியப்பன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த மாவட்ட இளைஞரணி தலைவர் விவேக் குமார் வரவேற்றார். மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் நைனார் பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் காணொளி வாயிலாக உரையாற்றினர். We Will Do It என்ற முழக்கத்துடன், 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து விக்சித் பாரத் @2047’ உறுதிமொழி ஏற்கப்பட்டு, 25 ஆண்டு மக்கள் சேவையைக் குறிக்கும் சேவா ஜோதி ஏற்றப்பட்டது. பின்னர் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சக்தி நகர் வரை சேவா ஜோதி வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தீனதயாளன், அன்புராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கிருஷ்ணசாமி; மாவட்ட துணைத் தலைவர்கள் பாலமுருகன், முத்துக்குமார், தர்மர், ராஜலட்சுமி, ராம்குமார், புலிக்குட்டி, மாவட்ட செயலாளர்கள் அருணாச்சலம், மந்திரமூர்த்தி, மரகதா முப்பிடாதி, சண்முகராஜ்; பட்டியல் அணி மாநில செயலாளர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் ஓபிசி அணி மாவட்ட தலைவர் மாரியப்பன், மகளிர் அணி மாவட்ட தலைவி குணசீலா, பட்டியல் அணி மாவட்ட தலைவர் அசோக், சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் அலெக்ஸ் தேவேந்திரன், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், உமா மகேஸ்வரி, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர்கள் கார்மேகநாதன், ரஞ்சித் உள்ளிட்ட பல்வேறு அணிகள் மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட பிரிவு அமைப்பாளர்கள் வேல்பாண்டியன், கருப்பசாமி, வடிவேல் முருகன், கணேசன், முருகன், முரளிதரன், சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், நாகராஜ், ராமச்சந்திரன் மற்றும் மண்டல் தலைவர்கள் வைகுண்ட ராஜா, முருகன், கணேசன், இசக்கி முத்து, தட்சிணாமூர்த்தி, சரவணன் வேல் முருகையா, அன்பழகன், முத்துமாரியம்மன், பால்ராஜ், செல்வகுமார், கணேசன், முருகேசன், பரமசிவம், உதயகுமார், குட்டி ராஜ், வீரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவாக தென்காசி நகரத் தலைவர் சங்கர சுப்பிரமணியன் நன்றி கூறினார்.