தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் நவராத்திரி கலை விழா
1 min read
Tenkasi Thiruvalluvar Kazhagam’s Navaratri Arts Festival
7.10.2026
தென்காசி திருவள்ளுவர் கழகம் சார்பில் கழகத்தின் நூற்றாண்டுச் சிறப்பு நிகழ்வுகளை முன்ளிட்டு “நவராத்திரி -கலை விழா – 2026” வருகிற 9, 10, 11 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
தென்காசி திருவள்ளுவர் கழகம் 1927 – 2027 நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் நிலையில் திருக்குறள் நெறிகளையும் தமிழ் கலை, இலக்கியம், மற்றும் இசை மரபுகளையும் போற்றும் வகையில் இந்த நவராத்திரி கலை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 09.10.2026 வெள்ளிக்கிழமை முதல் 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை வரை, தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை, தென்காசி அம்மன் சன்னதியில் உள்ள திருக்குறள் மண்டபத்தில் கலை விழா நடைபெறுகிறது
அதன்படி 09.10.2026 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரை பத்மஸ்ரீ மருத்துவர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் என்னும்.டி பங்கேற்கும்
இசை அரங்கு திருக்குறள் இசை அமுதம் நிகழ்ச்சியும்,
10 10 2026 சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரை கலை வளர்மணி நாட்டிய ஸ்ரீ குரு முனைவர் சு.புருஷோத்தமன் பி கிரேடு ஆர்டிஸ்ட் தூர்தர்ஷன் கேந்திரா பங்கேற்கும் நாட்டிய அரங்கு பண்ணும் வரதமும் நிகழ்ச்சியும்,
11 10 2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 08.30. மணி வரை மதுரை அண்ணா கல்லூரி முதல்வர் இசைத்தமிழ் அரசி, இந்திரா விஜயலட்சுமி வந்திருக்கும் வள்ளுவர குரலும் வண்ணத்திரை இசையும் இயல் அரங்கு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
முத்தமிழ் போற்றும் நூற்றாண்டு கான் கழக கலை விழாவிற்கு சுற்றமுடன் வருக என தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் தலைவர் வழக்குரைஞர் ந.கனகசபாபதி, திருவள்ளுவர் கழகத்தின் செயலர் இராம.தீத்தாரப்பன், திருவள்ளுவர் கழகத்தின் பொருளாளர் வ. சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.