வாசுதேவநல்லூர் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா.
1 min read
Purattasi Pongal festival at the Vasudevanallur temple.
8.10.2026
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் நாடார் உறவின் முறை மாரியம்மன், பத்திர காளியம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
வாசுதேவநல்லூர் காமராஜர் தெருவில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன்புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.
ஆறாம் நாளான நேற்று மாரியம்மன் கோவில் முன்பு மாலையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து இரவு 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன சப்பரத்தில் மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நிமிதமிருந்த பக்தர்கள்ஆயிரம் பானைகள் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், கயிறு குத்தி விளையாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் நாடார் உறவின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.