புற்றுநோய் சிகிச்சையில் மருந்தை மாற்றி வழங்கியதால் நோயாளிகள் பாதிப்பு-17 பேர் கைது
1 min read
Shocking incident at a Delhi hospital: 100 people affected after being administered the wrong medication during cancer treatment
8.10.2026
டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக ளும் இணைந்து, புற்று நோய் மருந்து கடத்தல் மற் றும் போலி மருந்து நெட்வொர்க் தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த போலி மருந்து நெட்வொர்க்கில் ஈடுபட்ட மருந்து விநியோகஸ்தர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற் றும் இடைத்தரகர்கள் உட்பட 17 நபர்களை டெல்லி காவல் குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.
டெல்லிஎன்.சி.ஆர், அரி யானா, உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநிலங்க ளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப் பட்டது.அப்போது போலி மருந்துகள் புற்று நோயா ளிகளுக்கு வழங்கப்பட்டு அம்பலமானது.
இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
இதில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று இந்த மருந்துகள் போலியானவை அல்ல என்றாலும், அவை உண் மையான நோயாளிகளுக்கு சென்றடையாமல் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதே இந்த விவகாரத்தில் பெரும் ஆத்தாகும்.
ஒரு நோயாளிக்காகத் தயாரிக்கப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்தை மற்றொருவர் உட்கொள்ளும் போது ஆபத்துகள் நேரிடலாம். தவறான மருந்தை உட்
கொள்ளும் போது, அது அந்த நோயாளியின் புற்று நோயை எதிர்க்காமல் போகலாம். இதனால் சரியான நேரத்தில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை தாமதமாகும்.
ஒருபோதும் உட்கொள்ளக் கூடாத வீரியமிக்க மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நோயாளிகளுக்கு கடுமையான பக்கவிளைவுகள் அல்லது நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. புற்று நோய் சிகிச்சையானது மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட சுழற்சி முறைகளைக் (சைக்கி லஸ்) கொண்டது. மருத்துவக் கண்காணிப்பு இல்லாமல் மருந்தின் அளவோ அல்லது நேரமோ மாறும் போது அது உடலைப் பெரிதாகப் பாதிக்கலாம்.
தங்களுக்கு வழங்கப்பட்ட மருந்து, மருத்துவர் பரிந்துரைத்த சீட்டுடன் பொருந்தவில்லை என்று சந்தேகம் எழுந்தால், நோயாளிகள் உடனடியாக தங்கள் புற்றுநோய் மருத்துவரையோ அல்லது மருத்துவமனை மருந்தகத் தையோதொடர்புகொள்ள வேண்டும்.
மருந்துகள், அவற்றின் பேக்கிங், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு மற்றும் பில் ஆகியவற்றைச் சரி பார்ப்பதற்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத அல்லது அதிகாரப்பூர்வ மற்ற வழிகள் மூலம் விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.