October 8, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகரில் மாணவிகளுக்காக புதிய பேருந்து சேவை

1 min read

New bus service for female students in Virudhunagar

8.10.2026
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் முன்னிலையில், கொடியசைத்து தொடங்கி வைத்து மாணவிகளுடன் அரசுப்பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு வரும் மாணவிகள் அரசு பேருந்துகளில் அல்லம்பட்டி விலக்கில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார் 700 மீட்டர் பள்ளிக்கு நடந்து சென்று வந்தனர். இதன் காரணமாக பள்ளிக்கு காலதாமதமாக செல்வதும், போக்குவத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது. ஆகையால், பள்ளிக்கு சென்று வர ஏதுவாக பள்ளியிலிருந்து எம்.எஸ்.பி.நாடார் நகராட்சி பேருந்து நிலையம் வரை அரசுப் பேருந்து வழித்தட சேவை செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையினை ஏற்று பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில், பள்ளி நேரங்களான காலை 08.20 மணிக்கு விருதுநகர் எம்.எஸ்.பி.நாடார் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பள்ளிக்கும் மற்றும் மாலை 04.05 மணிக்கு பள்ளியில் இருந்து புறப்பட்டு விருதுநகர் எம்.எஸ்.பி.நாடார் நகராட்சி பேருந்து நிலையத்திற்கு சென்றடையும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன், அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *