October 8, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு மானியம்- விருதுநகர் ஆட்சியர் தகவல்

1 min read

Subsidy for those undertaking a pilgrimage to Jerusalem – Virudhunagar Collector’s announcement

8.10.2026
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்துவர்கள் பயனடையும் வகையில் ஜெருசேலம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் 550 கிறித்துவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/-வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ஜெருசேலம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்துவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவத்தினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து (5-வது தளம், அறை எண்-505) கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.01.2027-க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி -ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பராம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை – 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *