October 9, 2026

Seithi Saral

Tamil News Channel

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு – முதல்-அமைச்சர் விஜய் பெருமிதம்

1 min read

Nobel Peace Prize for Navanethem Pillay – Chief Minister Vijay expresses pride.

9.10.2026
2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ‘தமிழ் வம்சாவளி’ நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்துள்ளது. அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நவநீதம் பிள்ளைக்கு, தமிழ்நாடு
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்காகவும், உலக அமைதிக்காகவும், நீதிக்காகவும் அயராது குரல் கொடுத்து வருபவரும், தென்னாப்பிரிக்கா வாழ் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான நவநீதம் பிள்ளை, 2026-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னாப்பிரிக்க மண்ணில் இனவெறிக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் வழியே தனது பயணத்தைத் தொடங்கி, அந்நாட்டின் ஐகோர்ட்டு நீதிபதியாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பதவி வகித்த நவநீதம் பிள்ளை, அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.

மனித உரிமைகள், சமத்துவம், நீதி மற்றும் உலக அமைதி ஆகிய உயரிய விழுமியங்களுக்காக அயராது பாடுபட்டுவரும் நவநீதம் பிள்ளைக்கு மீண்டும் எனது வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் பிறந்த ஒரு இந்திய குடிவழித் தமிழரான நவநீதம் பிள்ளையின் தந்தை ஒரு பேருந்து ஓட்டுநர். ஜனவரி 1965 இல் இவர் காபி பிள்ளை என்னும் வழக்கறிஞரை மணந்தார். 1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அவர், தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்கும், அவரது கணவர் உட்பட்ட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.
புவியிடம் அடிப்படையிலும் பால், அனுபவ நோக்கிலும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்[4].

1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் ”சமத்துவம் இப்போது” (Equality Now) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1995 இல் தென்னாபிரிக்காவின் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய குடிவழித் தமிழ்ப் பெண்மணி இவரே.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *