October 12, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் பேச்சு

1 min read

Central and State governments must work together: Chief Minister Vijay speaks

11.10.2026
பிரதமர் மோடி, சென்னையில் 13 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் துவக்கி வைத்த விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது:-
தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைத்ததற்காக நன்றி.
பல்லாயிரம் ஆண்டு கடந்த பண்பாடு, அவற்றை இன்றளவும் உயிர்ப்புடன் பேணி பாதுகாத்து வரும் மக்களையும் கொண்ட சிறப்பு மிக்க மாநிலம் தமிழகம் ஆகும். உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழை தாய்மொழியாக கொண்ட இம்மாநிலம் சிறப்பான வரலாறு, இலக்கியம், கலை, கட்டட கலை ஆகியவற்றால் தனித்துவம் பெற்றுள்ளது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நமது அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கல்வி சுகாதாரம், வேளாண் வளர்ச்சி, மீனவர் நலன் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.

குழந்தைகள், பெண்கள், திருநர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு நலத்திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்துகிறது.

தொழில், அறிவியல் , கலை இலக்கியம் ஆகிய துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பங்களித்து வரும் மாநிலம் தமிழகம் ஆகும்.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, அதன் பலன் மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை.தமிழகம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. 2036ம் ஆண்டில், 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை நோக்கி வேளாண்மை, தகவல், தொழில்நுட்ப திட்டங்களை தீட்டி வருகிறது.

இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல புதுமையான கண்டுபிடிப்பு, முதலீடு, உள்கட்டமைப்பு ஆகிய மூன்றுக்கும் நாம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
அதேநேரம் வளர்ச்சியின் பயன் சென்னையை தாண்டி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றடையும் என்ற வகையில் செயல்படுகிறோம்.தமிழக இளைஞர்கள் நமது பலம். அவர்களின் திறன், தொழில்நுட்ப அறிவு, புதுமை சிந்தனை ஆகியவற்றை உலகளாவிய சிந்தனையுடன் இணைப்பதே நமது இலக்கு.

இன்று துவங்கும், துவக்கும் திட்டங்கள் அடுத்த தலைமுறைக்கான முதலீடுகளாக அமைய வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *