October 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: திருக்குறளை பெருமை படுத்திய பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை

1 min read
Tenkasi: Archana performed in the name of Prime Minister Modi for honoring the Thirukkural.
11/10/2026
தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாத சுவாமி கோவிலில் வைத்து சமூக ஆர்வலரும் வாஞ்சி இயக்க நிறுவனருமான ராமநாதன், கடையம் கோபால் ஆகியோர் பாரதபிரதமர் நரேந்திரமோடி பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு செய்தனா்.

பின்னா் செய்தியாளர்களிடம் வாஞ்சி இயக்கத்தின் தலைவர் பி.ராமநாதன் கூறியதாவது;- திருக்குறளின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் இந்திய பிரதமா் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களுக்கு நன்றி நவிலும் விதத்தில் கோவிலில் அவர் பெயரில் அரச்சனை செய்தோம் மேலும் திருக்குறளைப் பற்றி தமிழர்களாகிய நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறோம் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருக் கிறோம்.

ஆனால் திருக்குறளை உலகப் பொதுமறை என்று பீற்றிக்கொண்டிருக்கிறோம். ஆனால் திருக்குறளை இது வரையில் வெளிநாடுகளின் தலைவா்கள் யாருக்காவது எப்போதாவது கொண்டு சேர்த்திருக்கிறோமா? இல்லையே இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் யாராவது வெளிநாடுகளின் தலைவர்களுக்கு அவர்கள் மொழியில் திருக்குறளை வழங்கியிருக்கிறார்களா? இல்லையே தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் முதல்வா்கள் யாராவது திருக்குறளின் இந்தி மொழி பெயர்ப்பை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திய பிரதமர்களுக்கு வழங்கியிருக்கிறார்களா,

அல்லது வடமாநில காங்கிரஸ் முதல்வர்களுக்காவது வழங்கியிருக்கிறார்களா? சரி அதுதான் போகட்டும் திருக்குறள் பற்றிப் பெருமையாகப் பேசும் திராவிட இயக்க தலைவா்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அந்நாட்டு தலைவா்களைச் சந்திக்குபோது அந்நாட்டவர்களின் மொழியில் திருக்குறளை மொழி பெயர்ப்பை வழங்கியிருக்கிறார்களா? குறைந்தபட்சம் திராவிட நாட்டின் பிற பகுதிகளான ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுக்காவது அவர்கள் மொழியில் திருக்குறளை வழங்கியிருக்கிறார்களா? இல்லையே ஒருவேளை அவ்வாறு செய்திருந்தால் அதைவிட ஒரு பெரிய விஷயமாக்கி அதனை தங்கள் சாதனையாக கொண்டாடித் தீர்த்திருப்பார்கள்.

இந்நிலையில்தான் வடமாநிலமான குஜராத்தை தனது மாநிலமாக கொண்டவரும் வடமொழியான குஜராத்தியைத் தனது தாய்மொழியாக கொண்டவருமான இந்தியப் பிரதமர் மாண்புமிகு நநேந்திரமோடி அவர்கள் தமிழர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை ரஷ்ய அதிபர் புடின் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வெளிநாடுகளில் திருக்குறளை பரப்புகிறார். பரப்புவதில் அக்களை கொண்டிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சமஸ்கிருத்திலும் இந்தியிலும் மிகச்சிறந்த நுால்கள் பல உள்ளன. மாண்புமிககு நரேந்திரமோடி அவர்கள் நினைத்திருந்தால் அந்த நுால்களின் ரஷ்ய மொழி பெயர்ப்பை ரஷ்ய அதிபர் புடின் அவர்களுக்கு வழங்கியிருக்கலாம். இந்தி பேசும் மாநிலங்களில் நல்ல பெயர் வாங்கியிருக்கலாம் ஆனால் அவர் அவ்வாறெல்லாம் செய்யவில்லை, தமிழர்களாகிய நாம் இந்திய பிரமதர் மோடி அவர்களின் செயலின் முக்கியத்துவைத்தை உணர்ந்திருக்கிறோமா?

மலையாளத்தில் எழுதப்பட்ட ஒரு நுாலின் ரஷ்ய மொழி பெயர்ப்பை ரஷ்ய அதிபர் புடினுக்கு மாண்புமிகு நரேந்திரமோடி வழங்கியிருந்தால் அரசியலுக்கு அப்பாற்பட்டு மலையாளிகள் அதை எப்படிக் கொண்டாடடியிருப்பார்கள்? ஆனால் நாம் அவ்வாறெல்லாம் செய்ய மாட்டோம் ஏனென்றால் நாம் தமிழர்கள் இங்கே குறிப்பிடதக்க முக்கியமான விஷயம் ஒன்று உண்டு அதாவது நரேந்திரமோடி அவர்கள் இந்த விஷயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடந்து கொண்டிருக்கிறார். நரேந்திரமோடி அவர்கள் எந்தச் சூழ்நிலையில் இவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதுதான் மிகவும் முக்கியம் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலின்போது அவர் ரஷ்ய அதிபர் புடின் அவர்களுக்கு திருக்குறள் ரஷ்ய மொழி பெயர்ப்பை வழங்கியிருந்தால் தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வாக்களர்களில் வாக்குகளை பாஜ.கட்சிக்கு ஈர்ப்பதற்கான யுக்தி என்று நாம் கருதலாம்.
ஆனால் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் பாஜக 28 தொகுதிகளில் போட்டியிட்டு 27 தொகுதிகளில் தமிழர்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட தமிழ்நாட்டில் பாஜகவை தோற்கடித்த தமிழர்கள் மீது கோபம் வெறுப்பு, பகைமை சிறிதும் கொள்ளாமல் தமிழர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் ரஷ்ய மொழி பெயர்ப்பை ரஷ்ய அதிபர் புடின் அவர்களுக்கு நரேந்திரமோடி வழங்குகிறார் என்றால் அவர் எவ்வளவு மாண்புமிக்கவர் அதனால்தான் தமிழா்கள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவர் சென்னைக்கு வருகைதரும் நாளில் தென்காசியில் அருள்பாலிக்கும் அருள்தரும் உலகம்மன் உடனுறை அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் அவர் பெயரில் நாம் அரச்சனை செய்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *