கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கருட சேவை
1 min read
Garuda Sevai at the Krishnan Temple in Keelapavoor
11.10.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே. உள்ள கீழப்பாவூர் தமிழர்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் புரட்டாசி மாத 4வது சனிக்கிழமையையொட்டி கருட சேவை நடைபெற்றது.
இதையொட்டி சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக காலையில் கும்ப ஜெபம், விசேஷ அபிசேகமும், மாலையில் சாயரட்சை, தீபாராதனை, இரவு சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனையும், தொடர்ந்து கருட சேவையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரவி பட்டாச்சாரியார் செய்திருந்தார்.