கரப்பான்பூச்சி கட்சி-இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் தேசவிரோத சக்திகள்- கங்கனா ரனாவத் விமர்சனம்
1 min read
“Cockroach Party” — Anti-national forces seeking to destabilize India: Kangana Ranaut’s criticism.
11/10/2026
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு வருகை தந்த எம்.பி. கங்கனா ரனாவத்திடம் சிஜேபி (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், குடிமக்களுக்கு எந்தவிதமான அசெளகரியமும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைமையை தேச விரோத சக்திகள் என விமர்சனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “இந்த தேசவிரோத சக்திகளை மக்கள் இப்போது எப்படி அம்பலப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்.
காவல்துறையை விடுங்கள், இப்போது சாதாரண மக்களும் சிஜேபி கட்சிக்காரர்களை பிடித்து அவர்களிடம் பதில்களை கேட்பார்கள். ஏனென்றால் மக்கள் அவர்களை அடையாளம் காண தொடங்கிவிட்டனர்” என்று கூறினார்.