இந்தியா கூட்டணி சார்பில் நாளை போராட்டம்
1 min read
Protest by the INDIA alliance tomorrow.
11.10.2026
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்திற்கு பேரணி செல்ல முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அகில இந்திய வானொலி நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேரத்திற்குப் பின் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டார். அதன்பின் ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதற்கிடையே ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி சிஜேபி-யின் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் அறிவித்தனர். ஆனால், ஜந்தர் மந்தரில் அனுமதி வழங்கப்படவில்லை. போராட்டத்திற்கு முயன்றவர்கள் அங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியிலேயே இருக்குமாறு, அக்கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
CJP அமைப்பின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது டெல்லி காவல்துறையினரும் பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாகக் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.