October 12, 2026

Seithi Saral

Tamil News Channel

பணிமனை மேலாளரை கத்தியால் குத்திய ஓட்டுநர்

1 min read

Driver stabs workshop manager with a knife.

12.10.2026
கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஒருவர், பணிமனை மேலாளரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராக பணியாற்றி வருபவர் செந்தமிழ்ச் செல்வன். இவருக்கு பணிமனை மேலாளரான சுரேஷ் என்பவர் பணியிட மாற்றம் செய்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த ஓட்டுநர் இன்று (திங்கட்கிழமை) சுரேஷை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

சுரேஷின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர், உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஓட்டுநர் செந்தமிழ்ச் செல்வனை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசுப் போக்குவரத்து ஊழியர் ஒருவரே தனது உயர் அதிகாரியை கத்தியால் குத்திய சம்பவம் போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *